Friday, June 4, 2010

அமெரிக்க தமிழர் திருவிழா FETNA 2010

”செந்தமிழால் சேர்ந்திணைவோம், செயல்பட்டே இனம் காப்போம்”
FETNA 2010 .
செந்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் ச. இலக்குவனாரின் நூற்றாண்டு விழாவாகவும் இந்த வருடம் அமைந்திருக்கிறது.
இந்த வருடம் ”செந்தமிழால் சேர்ந்திணைவோம், செயல்பட்டே இனம் காப்போம்” என்கிற தலைப்பை மையாமாக வைத்து கதை, கவிதை, பாட்டு, நடனம்,வினாடிவினா, தமிழ் பீ, ஜெப்படி,கவியரங்கம் நடக்கவிருக்கிறது.
இந்த பெஃட்னா தலமை குழு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு
மாநிலத்தில் இருந்து திருவிழாவை திட்டமிட்டு அங்குள்ள தமிழர்களுடன் உற்சாகத்துடன் ஒன்று சேர்ந்து உழைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறது.இந்த வருடம் கனெக்டிக்கடில் நடக்கிறது.
வட அமெரிக்காவில் கனெக்டிக்கெட் மகாணத்தில் ப்வனி வரப்போகிறாள் நம் தமிழ்தாய். வரும் ஜூலை மாதம் 3-5 தினங்களில் (அமெரிக்க சுத்ந்திர தின விடுமுறை) அன்று வாட்டர்பெர்ரி என்கிற ஊரில் பாலஸ் தியேட்டரில் நடக்கவிருக்கும் கண்கொள்ளா காட்சி. இதில் கலை இலக்கிய நிகழ்ச்சிகளும், அந்தந்த மாநிஙகளிலுந்தும் தமிழ்சங்க நிகழ்ச்சிகள், எராளமான கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாட இருக்கிறது.
இந்தியாவில் இருந்து இயக்குனர், பாரதிராஜா, நடிகர், விக்ரம், நடிகை த்ரிஷா,
தவத்திரு மருதாசலா அடிகளார், நடிகர், சந்தாணம், சிந்திக்கவைக்க, பேராசியயை பர்வீன் சுல்தானா, கவிஞர் தாமரை, மற்றும் பாடகி சாதனா சர்க்கம், மெல்லிசை இயக்குனர் ஹாரிஸ் ஜெயராஜ், பாடகர் கார்த்திக்குடன் இன்னிசையும் நடக்கவிருக்கிறது காணா தவறாதிர். மேலும் விபரங்களுக்கு FETNA 2010.
நன்றி. இதை பப்ளிசிட்டி செய்ய உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும்
மறக்காமல் சொல்லவும். இந்த செய்தியை ஆர்வத்துடன் படிக்கிற நிங்கள் செய்யவேண்டியது:

ஆசையிருந்தும் நேரம், தூரம், பணவீக்கம் போன்ற நெருக்கடியால் உங்களால்
வர முடியாவிட்டாலும், அமெரிக்காவில் உள்ள உங்கள், உறவினர்/நண்பருக்கு தெரிய படுத்தவும். அதை விட மேலானது உங்கள் வாழ்த்துக்களை
மறக்காமல் FETNa வுக்கு அனுப்பவும்.
நன்றி..நன்றி..

1 comment:

viji said...

Kanna, I am vijiaunty from Kansas. I missed your phone No. Shall you kindly provide me im my Gmail account?
viji(aunty).