Tuesday, January 12, 2010

கத்தரிக்காய் புளிப்பு கூட்டு






தேவையானவை

பச்ச கத்தரிக்காய் - 5
துவரம் பருப்பு - ½ கப்
புளி - நெல்லிகாய் அளவு
சம்பார் பொடி - 1 தே.க
மஞ்சள் தூள் - ½ தே.க
உப்பு - தேவைகேற்ப்ப

மசாலா பொடிக்க
------------------------
எண்ணெய் - 1 தே.க
தனியா - 1 தே.க
உளுத்தம் பருப்பு - 1 தே.க
வற்றல் மிளகாய் - 5
தேங்காய் துருவல் - 2 தே.க
தாளிக்க
------------
எண்னெய் - 1 தே.க
கடுகு - ½ தே.க
வெந்தயம் - ½ தே.க
மிளகாய் வற்றல் - 2
பெருங்காயத்தூள் - ½ தே.க
கறிவேப்பிலை - கொஞ்சம்

செய்முறை
கத்தரிக்காயை நல்ல சின்ன துண்டுகளாக்க நறுக்கவும்.
பொடிக்கயுள்ளதை எண்ணெய் விட்டு நன்கு சிவக்க வறுத்து பொடிக்கவும்.
பருப்பை வேகவத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி சேர்த்தும் செய்யலாம்.
துவரம் பருப்புக்கு பதில் கடலைபருப்பு சேர்க்கலாம்.
மொச்சை,கடலை,பயறுவகைகள் சேர்த்தும் செய்யலாம்.
பாத்திரத்தில் தண்னிர், கத்தரிக்காய், புளிகரைசல்,
மஞ்சள் தூள்,உப்பு,சாம்பார் பொடி சேர்த்து பத்து நிமிடம்
நன்கு கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் அதில் பொடித்துள்ள பொடி,வேக வைத்துள்ள பருப்பையும் சேர்த்து மேலும் பத்து நிமிடம் கொதிக்கவிடவும்.
நல்ல வெந்ததும் தாளிக்கயுள்ளதை தாளித்து இறக்கவும்.
இதே போல் பூசனி,வாழைக்காய்,சௌ சௌ,சேனகிழங்கு
போன்ற காய்களிலும் செய்யலாம்.

No comments: